தொடருந்து விபத்து: பங்களாதேஷில் 4 பேர் பலி !

Tuesday, June 25th, 2019

பங்களாதேஷில் தொடருந்து ஒன்று தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தொடருந்து தலைநகர் டாக்காவின் கலவுர் பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றினூடாக பயணித்து கொண்டிருந்த போது தடம்புரண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சுக்கு இந்தவாரம் அக்னி வெம்மை ஆபத்து! 48 பாகையை தாண்டலாம்

பிரான்சில் இந்தவாரத்தில் அசாதாரணமாக அக்னி வெப்பம் தாக்கவுள்ளது. வழமையாக யூலை மற்றும் ஓகஸ்ற் மாதத்தில் தான் கோடைகாலத்தில் வெப்பநிலை உயருவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு யூன் மாத இறுதியிலேயே வெப்பநிலை 48 பாகையை தாண்டலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரான்சில் பரிஸ் நகர் உட்பட்ட 53 பிராந்தியங்களுக்கு வெப்பநிலை குறித்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகரிக்கும் வெப்பநிலை ஆகக்குறைந்தது 6 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலை தொடருமானால் 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப்போன்ற பேரவல அக்னிவெப்பநிலை உருவாகலாம் என எச்சரிக்கபட்டுள்ளது. 2003 இல் ஐரோப்பாவில் பரவியவெப்ப அலைகாரணமாக பிரான்சில் மட்டும் சுமார் 16000 பேர் பலியாகியிருந்தனர்.

தலைநகர் பரிஸையும் வெப்பம் தாக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளதால் சில பொதுப் பூங்காக்களில் அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு உடல் வெம்மையை தணித்து குளிர்மைப்படுத்தும் வகையில் சிறப்பு நீர்விசிறிகள் அமைக்கப்படுமென பரிஸ் மாநகரசபை வட்டாரம் அறிவித்துள்ளது

அக்னி பேரவல நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகள் யாவும் நாடளாவிய எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அக்னிவெப்பத்தால் ஐரோப்பாவில் சுமார் எழுபதாயிரம் பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: