தேசத்துரோக வழக்கில் முஷாரப்புக்கு பிடிவாரண்டு

Thursday, April 21st, 2016

பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தேசத்துரோக வழக்கில் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கு, தேசத்துரோக வழக்கு என பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் அவர் மீதான தேசத்துரோக வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு முஷாரபின் வக்கீல் மனு தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை நிராகரித்த கோர்ட், முஷாரப்பை கைது செய்து ஆஜர்படுத்துவதற்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டது.

Related posts: