தென் சீனக் கடல் பகுதியில் விமானப் பாதுகாப்பு மண்டலம் அமைக்கவுள்ள சீனா!

Thursday, July 14th, 2016

தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்த பிறகு தென் சீனக் கடல் பகுதியில் விமான பாதுகாப்பு மண்டலம் ஒன்றை தான் அமைக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.

இதன் மூலம் இப்பகுதியில் நுழையும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் தங்களின் வருகையை சீன அதிகாரிகளிடம் அறிவிப்பது தேவையாக அமையக்கூடும். அதே வேளையில், மேற்கூறிய கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பவழப்பாறை திட்டுகளுக்கு இரண்டு சிவிலியன் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது.

நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், அப்பகுதியில் தனது உரிமையினை நிலைநாட்டுவதில் தொடர்ந்து சீனா கொண்டுள்ள உறுதியை எடுத்துக் காட்டும் விதமாக, இவ்விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தோன்றுவதாக செய்திகள் கூறுகின்றன.

இதனிடையே தென் சீனக் கடலில் பெரும்பாலான பகுதிகளில், உள்ள வளங்களுக்கு சீனா உரிமை கோரியதற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லையென்று சர்வதேச தீர்ப்பாயம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: