துருக்கிக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

Monday, July 18th, 2016

தோல்வியடைந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அடுத்து, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியில் இறங்குவதற்கான அனுமதிப்பத்திரமாக அதிபர் எர்துவான் குறித்த சம்பவத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

சட்டப்படியான ஆட்சி துருக்கி முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ட்ஜாங் மார்க் ஐரோ பிரெஞ்சு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

திங்கள்கிழமை பிரஸல்ஸில் சந்திக்கும்போது ஐரோப்பிய ஜனநாயக கோட்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டுமென துருக்கிக்கு ஐரோப்பிய அமைச்சர்கள் அறிவுறுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும், விரைவில் ஸ்திரத்தன்மை திரும்பும் என்று நம்புவதாகவும் ரஷிய அதிபர் புதின் துருக்கி அதிபர் எர்துவானிடம் பேசியிருப்பதாக ரஷியா  கூறியிருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: