தாக்குதலை நியாயப்படுத்துகிறது ரஷ்யா!

Friday, August 19th, 2016

ஈரானில் அமைந்துள்ள விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட விமானங்கள் மூலமாக சிரியாவுக்குள் தாக்குதல்களை மேற்கொண்டமையை  ரஷ்யா நியாயப்படுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  சிரியா தொடர்பான ஐக்கிய நாடுகளில் தீர்மானத்தை அந்நடவடிக்கை மீறவில்லை எனவும், ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியாவிலுள்ள அடையாளம் வெளிப்படுத்தப்படாத இடமொன்றில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக, ஈரானின் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாக, தனது கவனத்தை அமெரிக்கா வெளியிட்டிருந்த நிலையிலேயே, ரஷ்யாவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

கருத்துத் தெரிவித்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2231, ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மீறியுள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தத் தீர்மானத்தில், ஈரானுக்கும் ஏனைய நாடுகளுக்குமாள இராணுவத் தொடர்புகள் தொடர்பாக ஆராயப்படுகிறது. இதில், இராணுவத் தொழில்நுட்பங்களை விநியோகித்தல், விற்றல், பரிமாற்றம் செய்தல் அல்லது பயிற்சிகளையோ அல்லது நிதி உதவிகளை வழங்குதல் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.

“நான் புரிந்துகொண்டதன் படி, ஈரானுக்குச் சில குறிப்பிட்ட ஆயுதங்களை வழங்குதலோ அல்லது இராணுவத் தளவாடங்களை வழங்குதலோ பற்றியது மாத்திரமன்று அந்தத் தீர்மானம். அதை விட அது சிக்கலானது” என, மார்க் டோனர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜேய் லவ்ரோவ், “ஈரானுக்குப் போர் விமானங்களை விநியோகித்தலோ, விற்றலோ அல்லது பரிமாற்றம் செய்தலோ இடம்பெற்றிருக்கவில்லை”

Related posts: