தற்கொலைதாரியை இடைமறித்த நாய்!

Sunday, April 9th, 2017

வடகிழக்கு நைஜீரிய நகரான மெய்டுகுரியில் பெண் தற்கொலைதாரி ஒருவரை நாய் ஒன்று இடைமிறித்ததால் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் தற்கொலை குண்டை கட்டிவந்த பதின்ம வயது பெண் ஒருவர் திருமண நிகழ்வில் கூடியிருந்தவர்களுக்குள் ஊடுருவுவதை அங்கிருந்த நாய் ஒன்று தடுத்துள்ளது.

திருமண வைபத்தில் பங்கேற்க வந்த ஒருவரது நாய் அந்த குண்டுதாரியை தாக்க ஆரம்பித்ததால் அவர் தனது குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் அந்த நாயுடன் குண்டுதாரி மாத்திரே உயிரிழந்துள்ளார்.

வடகிழக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசொன்றை உருவாக்கவெனக் கூறி வன்முறையில் ஈடுபட்டு வரும் பொகோ ஹராம் ஆயுதக் குழுவின் எட்டு ஆண்டு போராட்டத்தில் மெய்டுகுரி நகர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts: