டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்திற்கு எதிராக லெபனானில் ஆர்ப்பாட்டங்கள்
Tuesday, December 12th, 2017
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லெபனானில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
லெபனான் தலைநகர் பேரூட்டில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் நோக்கில் கண்ணீர் பிரயோகம் மற்றும் தண்ணீர் பீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், அராபிய லீக் அமைப்பு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினை கண்டித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்வரும் காலங்களில் பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் தகைமையினை அமெரிக்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுவராலய வளாகத்தினுள் அத்து மீறி நுழைய ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், கல்வீச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போலி கொடும்பாவிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயூட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அதேவேளை, இஸ்ரேலினால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, ஏதிலிகளாக ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் லெபனானில் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|