டிரம்ப் – கிம் ஜாங் திட்டமிட்டபடி சந்திப்பு?

Sunday, May 27th, 2018

அமெரிக்காவுடன், எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ள வட கொரியாவின் முடிவை, அதிபர், டொனால்டு டிரம்ப் வரவேற்றுஉள்ளார்.

சிங்கப்பூரில், ஜூன், 12ல், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு நடக்க இருந்தது. இதற்காக, அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. வட கொரியா, சில நிபந்தனைகளை ஏற்க மறுக்கிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பை ரத்து செய்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் நேற்று, ‘எப்போது வேண்டுமானாலும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்’ என, வட கொரியா அறிவித்தது.

இதுகுறித்து, அதிபர் டிரம்ப், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வட கொரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வட கொரியாவின் அறிவிப்பு, நல்ல செய்தி. ஆனால், நேரமும், செயல் திறனும் தான், இதற்கு பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: