செவ்வாய்க்கிழமை வரை விமான நிலையம் மூடப்படும்!

Sunday, March 27th, 2016
தாக்குதலை எதிர்நோக்கிய பிரஸல்ஸ் விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்படமாட்டாது என பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதனிடையே 31 பேர் உயிரிழக்கக் காரணமான அந்த குண்டுவெடிப்புகளை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா எனும் கேள்விகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.

Related posts: