சென்னையை வெள்ளம் மீண்டும் தாக்கும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Wednesday, May 18th, 2016

கொளுத்தி எடுத்த வெயிலுக்கு இதமாக தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஒரு பக்கம் எச்சரித்துள்ளது.

அதேசமயம் சென்னையில் கடுமையான மழை பெய்யும் எனவும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கிறார் தமிழ்நாடு வானிலை ஆய்வாளர்.

‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற பெயரில் இணையத்தை இயங்கி வருகிறார் பிரதீப் ஜான். சென்னை வெள்ளத்தின் சமயத்தில் இவரது வானிலை கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருந்தன.

அரசியல் தலைவர்கள் பலரும் மழை வெள்ளம் பற்றிய தங்கள் அறிக்கையில் இவரைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். இவரது முன்னறிவிப்புகள் அனைவருக்கும் உதவிகரமாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதியும் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தன்னுடையை வலைப்பதியில் கூறுகையில், சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த மழை 100 மிமீ மழையை கடந்து விட்டது.

மீண்டும் கடுமையான மழை பெய்யும் எனத் தெரிகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வைப் பார்த்தால் அப்படி இருக்கும் என்றே தெரிகிறது. வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உடனே டிசம்பர் 1 வெள்ளம் போல இருக்குமா என்று கேட்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

Related posts: