சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!

Sunday, July 31st, 2016
சீனாவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்த சீன அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு வாடகை வீட்டில் அவர்கள் சுமார் 400 முதலைக் குட்டிகளை கண்டுபிடித்தனர். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த சையமீஸ் முதலைக்குட்டிகள் பிறந்து இரண்டு வாரமே ஆன குட்டிகள். இவை அருகேயுள்ள வியட்நாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலைகளின் தோல்களை தோல் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சீனாவில் உரிமம் இல்லாமல் முதலைகளை வளர்ப்பது சட்டவிரோதமானது.

இந்த ஆண்டு முன்னதாக சீன அதிகாரிகள் இதே தென் பகுதி எல்லைப்புற மாவட்டத்தில் ஒரு லாரியில் 70 உறையவைக்கபப்ட்ட சையாமீஸ் முதலைகளைக் கண்டுபிடித்திருந்தனர்

Related posts: