கொலையாளியை அடையாளம் காண்பதற்கு மரபணு சோதனை!

Friday, July 29th, 2016

பிரான்ஸில், கடந்த செவ்வாயன்று தேவாலயத்தில் பிராத்தனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரு மூத்த பாதிரியாரைக் கொன்ற நபர்களில் ஒருவரை அடையாளம் காண மரபணு சோதனைகளை ஃ பிரஞ்சு புலனாய்வு அதிகாரிகள் நடத்துகின்றனர்.

வெளிநாட்டு முகமை ஒன்று அளித்த ரகசியத் தகவலை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் தேடி வரும் அதே நபர் தான் பாதிரியாரைக் கொன்ற நபராக இருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர் என செய்திகள் கூறுகின்றன.

தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள சவாய் பகுதியை சேர்ந்த அப்துல்மாலிக் பெடிட்ஜீன் என்பவர் தான் அந்த நபரின் பெயர் என சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தேவாலயத்தை விட்டு தப்பிச் செல்ல அவர் முயற்சி செய்த போது, போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்று விட்டனர்.

பாதிரியாரைக் கொன்ற மற்றொரு தாக்குதல்தாரியின் பெயர் அடெல் கெர்மிச் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மதகுரு இருந்த பகுதியின் அருகாமை பகுதியான நோர்மண்டியில் இந்நபர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: