சீனாவின் கொள்கைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை: டிரம்ப்

Monday, December 12th, 2016

“ஒரே சீனா கொள்கைக்கு” அமெரிக்கா கட்டுப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்; அவரின் அந்த அறிக்கை சீனாவில் பெரும் எதிர்ப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரே சீனா கொள்கையை ஒப்புக் கொண்டால் அதற்கு மாறாக, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில், தைவான் அதிபர் சாய் இங்-வென்னின் தொலைப்பேசி வாழ்த்துச் செய்தியை ஒப்புக் கொள்ளும் டிரம்பின் முடிவுக்கு சீனா ராஜீய ரீதியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

சினா, தைவானை தனது நாட்டின் பிரிந்து நிற்கும் ஒரு பகுதியாகவே கருதுகிறது. அமெரிக்கா, சீனாவின் கொள்கையை மறைமுகமாக ஒப்புக் கொண்டதே 1979 ஆம் ஆண்டிலிருந்து சீன அமெரிக்க உறவுக்கு அடித்தளமாக உள்ளது.

_92929093_gettyimages-628833102

Related posts: