சிறையில் கலவரம் – 40 கைதிகள் உயிரிழப்பு!

Tuesday, May 28th, 2019

பிரேசில் சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை பார்வையாளர் நேரத்தின்போது இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் பின்னர் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரேசில் சிறைகளில் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடியால்தான் இங்கு கைதிகள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

Related posts: