சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் பலி!

Monday, October 22nd, 2018

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் நேற்று ஹூடியத் மற்றும் துரிஹெமி மாவட்டங்களில் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன் இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜனாதிபதி மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.

இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிப்பதுடன், அரச ஆதரவு படைகளுக்கு சவுதி அரேபிய கூட்டுப்படைகள் ஆதரவாக செயற்பாட்டு வருகின்றன.

இதனால் அண்மை காலமாக சவுதி அரேபிய நகரங்களை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: