சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Tuesday, December 4th, 2018

மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெய்ல் அரைநிர்வாண சர்ச்சை விவகாரத்தில், பெயார்பெக்ஸ் நிறுவனம் சரியான ஆதாரங்களை முன்வைக்க தவறியதால், அவருக்கு 3 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக்கிண்னப் போட்டியை நடத்தின. இந்த தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் உடைமாற்றும் அறைக்கு பெண் ஒருவர் வந்திருந்த போது, கிறிஸ் கெய்ல் அரைநிர்வாணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக பெயார்பெக்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், பெண் ஒருவர் தற்செயலாக மேற்கிந்திய தீவுகளின் உடைமாற்றும் அறைக்குச் சென்றிருந்த போது கிரிஸ் கெயில் தன்னுடைய இடுப்பை மறைப்பதற்காக அணிந்திருந்த டவலை அகற்றி அரை நிர்வாணமாக தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாகவும், பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அதன் பின் இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கிறிஸ்கெய்லோ இந்த செய்தி உண்மை இல்லை எனவும், குறித்த ஊடகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் இந்த விவகாரம் தொடர்பாக நியூவ் சௌத் வேல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நான்கு பேர் கொண்ட நீதிபதிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றம் விசாரணைக்கான தீர்ப்பை அறிவித்தது.

அதில், கிறிஸ்கெயில் நடந்துக்கொண்டமைக்கான சரியான ஆதரங்கள் மற்றும் சாட்சிகளை பெயார்பெக்ஸ் நிறுவனம் முன்வைக்க தவறியுள்ளது.

இதனால், உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எதிராக, சாட்சியங்கள் இல்லாமல் செய்தியினை வெளியிட்டதற்காக 3 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இருப்பினும் பெயார்பெக்ஸ் ஊடகம், இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: