சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!

Monday, June 20th, 2022

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தில் வருவதாகவும் அவுஸ்ரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், எந்த தளர்வும் செய்யப்படவில்லை என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: