கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!

Wednesday, July 28th, 2021

உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக் – பேருந்து  மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கோர விபத்து குறித்து உத்தர பிரதேச பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  உத்தர பிரதேசத்தின் லக்னோ- அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்கள் பயணித்த  பேருந்தில்  பழுது ஏற்பட்டதால், பேருந்து  வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டது.

நள்ளிரவு என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில்  அதாவது வீதியில், தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில்  பேருந்தின் பின்புறம், அசுர வேகத்தில் வந்த ட்ரக் ஒன்று மோதியுள்ளது. 

இந்தக் கோர விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

000

Related posts: