கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி கப்பல்!
Saturday, January 21st, 2017அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யு.எஸ்.எஸ்.ஹொப்பர் நான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்க நாசகாரி கப்பலுக்கு கொழும்புத்துறை முகத்தில் இலங்கைக் கடற்படையால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு நீர்முழ்கி எதிர்ப்பு மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் பலநோக்கு போராயுத வசதிகளையும் கொண்ட இந்த நாசகாரி கப்பல், பேர்ல துறைமுகத்தில் இருந்து இயங்கி வருகிறது.
தற்போது இந்த நாசகாரி இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளது. கடந்த ஆண்டு எப்ரல் மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு வந்துள்ள 5ஆவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவாகும்.
ஏற்கனவே யு.எஸ்.எஸ்.புளுரிட்ஜ், யு.எஸ்.எஸ். நியூ ஓர்லியன்ஸ், யு.எஸ்.எஸ்.பிராங் கேபிள் ஆகிய அமெரிக்க போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கும் யு.எஸ்..எஸ் சோமசெற் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கும் கடந்த ஆண்டில் வந்திருந்தன. அதேவேளை கடந்த ஆண்டு செம்ரேம்பர் மாதம் இலங்கைக் கடற்பரப்புக்கு அருகாகப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது யு.எஸ்.எஸ். ஹொப்பர் நாசகாரியின் மாலுமி ஒருவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, இந்தப் போர்க்கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்திருந்தது. அம் மாலுமி இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|