கொரோனா தொற்று: British Airways இன் அதிரடி முடிவு!

Thursday, April 2nd, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து British Airways நிறுவனம் தமது பணியாளர்கள் 36 ஆயிரம் பேரை பணிகளில் இருந்து இடைநிறுத்தவுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் இரண்டு தரப்புக்களுக்கும் இணக்கத்துக்கு வந்துள்ளன. எனினும் இன்னும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பணிகளில் இருந்து இடைநிறுத்தப்படும் காலத்துக்கு British Airways பணியாளர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ள போதும் அங்கு புதிய வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: