குழந்தைகள் யாசகம் செய்ய செனகலில் தடை!

Sunday, July 3rd, 2016

யாசகம் செய்யும் குழந்தைகள் தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்று செனகல் அதிபர் மேக்கி சால் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். குழந்தைகளை யாசகம் செய்ய அனுப்புவோருக்கு அபராதமும் சிறைத் தணடனையும் வழங்கப்படுமென அவர் கூறியிருக்கிறார்.

செனகலில் குழந்தைகளை, பெரும்பாலும் சிறுவர்களை, தங்கிப் படிக்கும் பள்ளிகளில் குரான் படிக்க அனுப்புவது பாரம்பரிய நடைமுறையாகும்.

ஆனால், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள், மத ஆசிரியர்களால் யாசகம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு தெருக்களில் திரிகின்றார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னரே குழந்தைகள் யாசகம் செய்வதை கட்டாயப்படுத்துவதற்கு செனகல் தடை விதித்திருந்தபோதிலும் அந்த பழக்கம் தொடர்கிறது.

Related posts: