கணிணிகளில் ஊடுருவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நாடு கடத்த லண்டன் நீதிபதி உத்தரவு!

Saturday, September 17th, 2016

அமெரிக்காவில் அரசாங்க கணிணிகளை ஊடுருவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்த இலண்டனில் உள்ள நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோரின் தனிநபர் பதிவுகள் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்களை திருடியதாக லோரி லவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளின் கணினி அமைப்புகளை அவர் ஊடுறுவினார்.அதில், அமெரிக்க மத்திய ரிசர்வ், ராணுவம் மற்றும் நாசா உள்ளிட்டவையும் அடங்கும்.விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவர் தற்கொலை செய்வதற்கான அபாயம் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

மேலும்,அவர் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

_91225419_03b7fdfc-6994-485f-852c-9b0acc44ccb9

Related posts: