கடும் வெப்பம் – எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

Monday, July 22nd, 2019

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த வானிலை நிலவக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றன.

அமெரிக்கா மட்டுமின்றி, கனடாவின் சில பகுதிகளும் வெப்பத்தால் தாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: