கச்சதீவு திருத்தல வழிபாடுகளில் 5000 பேர் பங்கேற்பு!

Monday, February 20th, 2017

கச்சதீவு திருத்தலத்தில் நடைபெறும் வருடாந்த வழிபாட்டு நிகழ்வில் 5000 க்கும் அதிகமான இந்திய பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சதீவு வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக 5015 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு திருத்தலத்தில் பூஜைவழிபாடுகள் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் பெப்ரவரி மாத இறுதியில் வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் அதில் 3249 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தமுறை கச்சதீவை நோக்கி பயணிக்கவுள்ள இந்திய பக்தர்களுக்காக 147 படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

kachat06

Related posts: