ஒலிம்பிக் செலவுகளை குறைக்க முடியும் – ஒலிம்பிக் நிர்வாகம்!

Friday, October 21st, 2016

2020 ஆண்டு டோக்யோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆகின்ற செலவுகளை குறைக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது,

ஜப்பான் தலைநகர் டோக்யோவின் புதிய ஆளுநர் மூன்று விளையாட்டு இடங்களை நீக்குவதாகவும், படகு போட்டிகளை 400 கிலோ மீட்டருக்கு அப்பால் மாற்றிவிடுவதாகவும் அளித்த மிரட்டலுக்கு பிறகு, சிக்கல்களை விவாதிக்கும் பேச்சுவார்த்தைக்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பக் டோக்யோ வந்திருக்கிறார்.

தொடக்க மதிப்பீட்டை விட நான்கு மடங்கு அதிகமாக, அதாவது 30 பில்லியன் டாலர்களை விட அதிகமாக செலவாகும் என்று தற்போது மதிப்பிடப்படும் செலவை குறைப்பதற்கு டோக்யோவின் புதிய ஆளுநர் யுரிகோ கோய்கெ விரும்புகிறார்.

இந்த விளையாட்டுக்கு ஆகின்ற செலவு கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைவதாக தெரிவித்திருக்கும் தாமஸ் பக்கின் துணைவர், அதனை குறைப்பதற்கு இணைந்து செயல்பட போவதாக தெரிவித்திருக்கிறார்.

அரசு வீணாக செலவு செய்வதற்கு எதிரான ஆளுநர் யுரிகோ கோய்கெ செயல்படுவதால் நற்பெயர் பெற்றிருக்கிறார்.அங்கு வாழ்வோரும் அவருக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

92col145432578_4890607_20102016_aff_cmy

Related posts: