எண்ணெய் விலையை உயர்த்தும் முயற்சிக்கு ஆதரவு தரத் தயார்: ரஷ்ய அதிபர் புதின்!

Tuesday, October 11th, 2016

எண்ணெய் விலைகளை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தியில் உச்சவரம்பை விதிக்க தான் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற எரிபொருள் மாநாட்டில் பேசிய அவர், நவம்பரில் நடைபெறவுள்ள சந்திப்பில், எண்ணெய் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பான ஒபக், எண்ணெய் உற்பத்தியில் குறிப்பிட்ட வரம்பு விதிக்கும் முயற்சிகளை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

கூட்டமைப்பின் உறுப்பினர்களை தவிர்த்து, ரஷ்யா ஒரு முக்கிய எரிபொருள் உற்பத்தியாளராக உள்ளது. தென் கிழக்கு ஐரோப்பாவில் முடிவடையும் வகையில், யுக்ரைன் வழியாக ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு எரிவாயு குழாய் அமைப்பது குறித்து விவாதிக்க புதின் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

_91751066_gettyimages-613729520

Related posts: