உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகை வைக்கக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்!

Sunday, October 29th, 2017

உயிருடன் இருப்பவர்களின் நிழற்படங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பதாகைகளை வைப்பதற்கான அனுமதியை வழங்கினாலும், உயிரோடு இருப்பவர்களின் நிழற்படங்கள் இடம்பெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த உத்தரவிற்கு எதிராக சென்னை மாநகராட்சி சார்பில், சட்டத்தரணி விவேகாநந்தனால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அரசியல் கட்சிகள் உயிருடன் இருப்பவர்களின் நிழற்படங்களை பதாகைகளில் பொறிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related posts: