உடல்நலக்குறைவால் விமானத்தில் உயிரிழந்த பயணி!

Tuesday, June 21st, 2016

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எமிரேட்ஸ் என்ற விமானம் நேற்று காலை பிரித்தானியா புறப்பட்டுள்ளது

விமானத்தில் கிரேட்டர் மான்செஸ்ட்டர் நகருக்கு பயணமான முதியவர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவுஏற்பட்டதாககூறப்படுகிறது.இந்நிலையில்,உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில் விமானம் தரையிறங்கியுள்ளது. தயாராக இருந்த மருத்துவர்கள் பயணியை விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர்.

ஆனால், விமானம் பறந்தபோதே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உயிரிழப்பு விவாகரத்தில் சதி வேலை எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதே போல், பயணி விமானத்திலேயேஉயிரிழந்தசம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம், இந்த உயிரிழப்பில் விமான நிறுவனத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என தகவல்வெளியிட்டுள்ளது.

Related posts: