உக்ரைன் யுத்தக்களம் – முதல் முறையாக புட்டினை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்!

Monday, April 11th, 2022

உக்ரைன் போருக்கு முடிவைக் காண மற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது இதன்படி ஒஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமர் நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார்

இதன்போது ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒஸ்திரிய அதிபர் இன்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார்.

ஓஸ்ரிய அதிபர் முயற்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒஸ்ரிய அதிகாரிகள், கலந்துரையாடலை மேம்படுத்தல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விடயங்களை அதிபர் நெஹாமெர் இரண்டு நாட்டு தலைவர்களுடன் ஆராய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஸ்யா ஆரம்பித்த பின்னர், ரஸ்யாவுக்கு செல்லும் முதல் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக ஒஸ்ரிய அதிபர் கருதப்படுகிறார்.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்த 13 கி.மீ. தொலைவுக்கு ரஷ்ய போர் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக  உயிருக்கு பயந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறுகின்றனர். கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.

உக்ரைனின் வேலிகீ புர்லக் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தை நோக்கி ரஷ்ய போர் வாகனங்கள் 13 கி.மீ. தொலைவுக்கு தொடர்ந்து செல்கிற காட்சியை மேக்சார் செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக ஊடக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: