ஈராக்கில் பிரித்தானிய படைகள் போர்க்குற்றம் செய்த ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிப்பு!

Monday, December 11th, 2017

ஈராக்கில் பிரித்தானிய படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளதாக ‘ஹேக்’ கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்கு தொடுநர் பாட்டோவ் பென்சோடா இதனை தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு எதிராக பிரித்தானிய படையினர் போர்க்குற்றங்களை புரிந்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக ‘லண்டன் காடியன்’ செய்தித்தாள செய்தி வெளியிட்டுள்ளது.இந்தநிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: