ஈராக்கில் தற்கொலை தாக்குதல்: 44 பேர் பலி!

Wednesday, May 18th, 2016

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர தற்கொலை படை தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகரான பாக்தாத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள Al-Shaab என்ற மாவட்டத்தில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளான்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 38 பேர் பலியாயினர். இந்த தாக்குதலை தொடர்ந்து சில நிமிடங்கள் இடைவெளியில் Al-Rasheed என்ற பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரு தாக்குதல்களிலும் 90க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்த தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொருப்பேற்க வில்லை.

எனினும், இதே நகரில் கடந்த வாரம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதால், இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தலைநகரில் நடந்த தொடர் தாக்குதல் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளது.

Related posts: