ஈராக்கில் கோர தாக்குதல் – 30 பேர் பலி – 50 பேர் படுகாயம்!

Tuesday, July 20th, 2021

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்கொலைப்படை தாக்குதலாக இது நடத்தப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணையை பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ளனர். ஈராக்கில் சமீப காலங்களில் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது

Related posts: