ஜப்பான் – ரஷ்யாவிற்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

Tuesday, March 21st, 2017

ஜப்பானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், ஜப்பானுடன் கலந்துரையாடவுள்ளார்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சேர்ஜி இன்று டோக்கியோவில் ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையே பொருளாதார திட்டங்களை வலுப்படுத்துவதன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்திருந்தன.

இதன் முதற்கட்டமாகவே இன்றைய பேச்சுவார்த்தை அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய எல்லைப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்டும் வகையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிற்கு பயணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் போது ஜப்பான் சரணடையும் தருவாயில் அதன் வடக்கேயுள்ள 4 தெற்கு குரில் தீவுகளை ரஷ்யா சட்டத்துக்குப் புறம்பாகக் கைப்பற்றி இருந்தது.

இதனால் சுமார் 17 ஆயிரம் ஜப்பானியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: