ஈக்வடோரில் நிலநடுக்கம்! உயிரிழப்பு 233 அதிகரிப்பு!

Monday, April 18th, 2016

ஈக்வடோரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். எனவே, இவ்வாறான நிலையில் அனைவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை அந்நாட்டில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.8 ரிகடர் அளவு சக்தி கொண்டது என அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நூறாண்டுகளில் 7.0 அளவுகொண்ட பல நிலநடுக்கங்களை ஈக்வடோர் எதிர்கொண்டுள்ளது போதிலும், இவ்வாறான பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90-10

625.0.560.350.160.300.053.800.668.160.90-9

625.0.560.350.160.300.053.800.668.160.90-6

Related posts: