இஸ்ரேல் – ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி!

Thursday, May 13th, 2021

இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இராணுவ பிரிவு ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளமையினால் இதுவரை 70க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 69 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூறியுள்ளனர்.
அதேநேரம் காசாவிலிருந்து ரொக்கெட்டுகள் வீசியதன் விளைவாக, ஏழு இறப்புகளையும் 200க்கும் மேற்பட்ட காயங்களையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் காசா பகுதியில் கடும் குண்டுவீச்சு அதிகாலை தொடர்ந்தது.
ஹமாஸ் அதன் காசா நகர தளபதி பாஸ்ஸெம் இசா, இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்களை முன்னதாக ரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: