இஸ்ரேலில் மத நிகழ்வில் நெரிசல் – 50 பேர் உயிரிழப்பு!

Friday, April 30th, 2021

இஸ்ரேலில் மதநிகழ்வொன்றில் சனநெரிசல் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியில் வருடந்தோறும் இடம்பெறும்   Lag B’Omer மத நிகழ்விலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த மதநிகழ்வில் ஒரு சில நொடிகளில் இந்த விபத்து ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

படிகளில் ஏறிக்கொண்டிருந்த தடுமாறி கீழே விழத் தொடங்கியவுடன் இந்த விபத்து இடம்பெறத் தொடங்கியது. பின்னால் நின்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக விழுந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில நிமிடங்களில் இது இடம்பெற்றது, மக்கள் விழுந்தனர் ஒருவரை ஒருவர் மிதித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் குறுகிய பாதை வழியாக மக்கள் தப்பிவெளியே முயல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே குறித்த விபத்தில் 103 பேர் காயமமடைந்துள்ளனர் இவர்களில் 38 நிலைமை ஆபத்தானதாககாணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: