இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ரபெல் ஜெட்டுகளை பயன்படுத்தும் – சீனா ஊடகங்கள் தெரிவிப்பு!

Friday, September 30th, 2016

காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ் தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா திட்ட மிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்தவாறுதான் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த முகாம்களை தாக்கி அழிக்க இந்திய இராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்  என்ற பெயரில் இராணுவத்தின் கமாண்டோ படை பிரிவு தாக்குதல் நடத்தியது.  இதில் தீவிரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கபட்டது. 55 தீவிரவாதிகள் கொல்லபட்டனர். பாகிஸ்தான் இராணூவ வீரர்கள்  இருவரும் சுட்டு கொல்லபட்டனர்.

இதை தொடர்ந்து எல்லையில் பதட்டம் அதிகரித்து உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க சீனா முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பாக இரு நாடுகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சாங் இன்று பீஜிங் நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி கருத்து வேறுபாடுகளை களைந்து தெற்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய பாடுபடும் என்று சீனா நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.

ஆனால் இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ரபெல் போர் விமானங்களை சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பகுதிகளில் பயன்படுத்தும்.  இந்தியா உலகில் அதிகம் ஆயுதம் வாங்கும் நாடாக இருந்து வருகிறது என சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்தியா சமீபத்தில் பிரான்சிடம் இருந்து 36 ரபெல் போர்விமானங்கள் வாங்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.  இந்திய விமானப்படை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய எல்லைக்குள் சீனா, பாகிஸ்தான் இலக்குகளை தாக்க இந்த விமானங்களை அனுமதிக்கும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

gk

Related posts: