இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் – அல் கொய்தா எச்சரிக்கை!

Thursday, June 9th, 2022

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அல் கொய்தா பயங்கரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததை அடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என்று அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி பதிவிட்ட கடிதத்தில், இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் நபிகள் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் குஜராத், ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் எனவும் எங்கள் முடிவுக்காக டெல்லி மும்பை உத்திரபிரதேசம் குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல் கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: