ஆயுத விவகாரம் – துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!

Friday, December 18th, 2020

ரஷ்யாவிடம் இருந்து துருக்கி எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியதை அடுத்து துருக்கி பாதுகாப்புத்துறை தொழில் இயக்கு நகரம் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.
தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம்.
இந்த ஆயுதத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்கா தலைமையிலான நோட்டோ அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், நோட்டோ உறுப்பினராக இருந்துகொண்டு ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியதால் கடும் கோபமடைந்த அமெரிக்கா துருக்கி மீது பொருளாதாரத்தடை விதித்தது.
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த பொருளாதார தடையால் இரு நாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஐரோப்பிய நாடுகளும் துருக்கி மீது பொருளாதாரத்தடை விதிக்க திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், தன் நாடு மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைக்கு துருக்கி ஜனாதிபதி தாயூப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts: