ஆப்கானிஸ்தானில் இராணுவம் தாக்குதல் – 27 தலீபான் பயங்கரவாதிகள் பலி!

Friday, March 26th, 2021

கட்டார் நாட்டின் டோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள். இராணுவம் மீதும், போலீசார் மீதும் அவ்வப்போது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு
எதிராக அந்த நாட்டின் இராணுவமும் அவ்வப்போது சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு தெற்கு ஜாபுல் மாகாணத்தில் மிஷான் மற்றும் ஷின்காய் மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இராணுவத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களின் அடிப்படையில் இராணுவத்தினர் நடத்திய அதிரடியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதல்களில் 27 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் இராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது மட்டுமின்றி தலீபான் பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதையும், ஒருதொகை வெடிபொருட்களும் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: