அவுஸ்ரேலிய தலைநகரில் நிலநடுக்கம்!

Tuesday, July 18th, 2017

அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கமொன்று குடியிருப்பாளர்களால் உணரப்பட்டுள்ளது.

எவலோன் கடற்பகுதியில் நேற்றுக்காலை ஏற்ப்பட்ட இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியிருந்ததாகவும்இ சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை அவுஸ்ரேலியா அருகே பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான ரொங்காவில் (வுழபெய) கடலுக்கு அடியில் 6.1 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கமொன்று பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரொங்கா நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற பகுதியிலிருந்து 180 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 97 கிலோமீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததுடன்இ நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான தகவல்களும் உடனடியாக வெளியாகவில்லை.

Related posts: