அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம் – இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!

Tuesday, March 1st, 2022

கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று திங்கட்கிழமை நீருக்குள் மூழ்கின.

2,145 வீடுகள் மற்றும் 2,356 வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 10,827 கட்டடங்களின் தரைப் பலகைகளுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமைமுதல் பெய்துவரும் தொடர் மழையால் பிரிஸ்பேன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரிஸ்பேனின் தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் சிட்டியில் சூரிய உதயத்திற்கு முன் வெள்ளத்தில் மூழ்கிய 50 வயதுடைய ஒருவர் திங்கள்கிழமை நீரில் மூழ்கி இறந்தார் இதனால். உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னாஸ்டாசியா பலாஸ்க்சுக் கூறுகையில், ‘இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவு மழையை யாரும் கண்டதில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அவசர சேவைகள் 130 க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளனதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: