குலன் ஆதரவாளர்களை பிடிக்க நீதிமன்றங்களில் போலிசார் சோதனை!

Monday, August 15th, 2016

கடந்த மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை விசாரித்து வரும் போலிசார் இஸ்தான்புல்லில் உள்ள மூன்று நீதிமன்றங்களில் சோதனை நடத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் என 170 க்கும் அதிகமானோரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தொடரந்து இந்த சோதனைகள் நடந்துள்ளன.

அலுவலகங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு, அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு ஃபெத்துல்லா குலனின் விசுவாசிகளே காரணம் என்று துருக்கி அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை ஃபெத்துல்லா குலன் மறுத்துள்ளார். குலன் இயக்கத்தை சேர்ந்தவர்களை களையெடுக்க துருக்கி அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளில், பல்லாயிரக்கணக்கான படையினர், அரசு ஊழியர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்ற பலர் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Related posts: