அழியும் தறுவாயில் யேமன் சிறுவர்கள்!

Friday, August 4th, 2017

யேமனில் 5 வயதுக்குக் குறைவான 1 மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி கிடைக்காத பட்சத்தில் இலட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்நாட்டில் போர்ச் சூழல் மற்றும் கடுமையான வரட்சி காரணமாக 28 மில்லியன் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சிறுவர்கள் எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக சிறுவர் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யேமன் எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைக்கு உதவுவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts: