அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர்!

Sunday, May 20th, 2018

ரெக்ஸ் டில்லர்சன்க்கு பதிலாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இயக்குனர் மைக் போம்பியோவை புதிய வெளியுறவு மந்திரியாக டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்தை நாடாளுமன்ற செனட் சபை ஏற்று அவர் பதவியும் ஏற்றுக்கொண்டார்.

சி.ஐ.ஏ.யில் அவர் வகித்து வந்த பதவிக்கு கினா ஹாஸ்பெல் (61) என்ற பெண் நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனம் தொடர்பான ஓட்டெடுப்பு செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நியமனத்துக்கு ஆதரவாக 54 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக 45 ஓட்டுகள் விழுந்தன. இதனால் அவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைத்து விட்டது. அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 6 பேர் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கினா ஹாஸ்பெல் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். 70 ஆண்டு கால பாரம்பரியமிக்க சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனர் என்ற சிறப்பை கினா ஹாஸ்பெல் பெற்று உள்ளார்.

Related posts: