அமெரிக்க உளவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள ஈரான்!

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக ஈரான் நாட்டில் செயல்பட்டு வந்த உளவாளிகளில் சிலருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும் சிலரை கைது செய்துள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.
ஈரான் நாட்டில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பால் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய உளவு வலைப்பின்னல் தகற்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 17 உளவாளிகள் கைது செய்யப்பட்டு அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்படுள்ளது என்று ஈரான் கூறியுள்ளது. .
அந்த உளவாளிகள் ஈரானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான தகவல்களை திருடி அதை அமெரிக்காவின் சிஐஏ அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவை அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார்.
Related posts:
மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே புகையிரத சேவை!
வடகொரியாவின் திடீர் முடிவு!
சவூதி தொலைக்காட்சிகளில் மகளிர் செய்திகள் வாசிப்பதற்கு அனுமதி!
|
|