அமெரிக்கா மீது பொருளாதார தடை  – லெபனான் வெளியுறவு அமைச்சர்!

Monday, December 11th, 2017

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அரபு நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என லெபனான் வெளியுறவு அமைச்சர் ஜெப்ரான் பாஸ்சில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

உலக அளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ள டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, பாலஸ்தீனம் ௲ இஸ்ரேல் எல்லையில் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. ஒட்டு மொத்த அரபு நாடுகளும் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. தனது முடிவை டிரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.

Related posts: