அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்!

Saturday, January 21st, 2017

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார்.

புதிய அதிபர் டிரம்ப் தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் திகதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் இலாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்றார் டிரம்ப். இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

_93719707_gettyimages-632197430

Related posts: