அமெரிக்கத் தூதரகத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளது!

Wednesday, January 24th, 2018

அமெரிக்கத் தூதரகத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க சென்ரர் நிறுவனமும் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியினரும், குடியரசு கட்சியினரும் தற்காலிக நிதியீட்டம் தொடர்பில் வாக்களித்ததனைத் தொடர்ந்து, தூதரகங்களின் பணிகள் இதுவரை நிறுத்தப்பட்டிருந்தன.

சட்டவிரோத இளம் குடியேறிகள் தொடர்பிலான விடயங்கள் குறித்து விவாதம் நடத்துவதற்கு குடியரசு கட்சி இணங்கியைதனைத் தொடர்ந்து, பணிகள் வழமைக்குத் திரும்பியிருந்ததாக தூதுவராலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டம் நிறைவேற்றப்படுவது காலம் தாழ்த்திய காரணத்தினால் தூதரக பணியாளர்கள் பணியைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டிருந்துள்ளது. எனினும் அஅமெரிக்கத்தூதுரகத்தின் வழமையான செயற்பாடுகள் வழமைக்குத்திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: