அதிகளவு குழந்தைகள் பலிகொடுப்பு – தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

Sunday, April 29th, 2018

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பலிகொடுக்கப்பட்டதாக கருதப்படும் குழந்தைகளின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவை 550 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 140க்கும் அதிகமான குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என அந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது மனித வரலாற்றில் அதிகளவு குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.